ஆபிஸ் ஸ்பேஸ் - நகைச்சுவை திரைப்படம்

பதிவு: Blogger

இனிடெக் என்ற கம்பனியில் பீட்டர் கிப்பன்ஸ் வேலை பார்க்கிறான்.திடீரென ஒரு நாள் அவனது கம்பனி ஆள் குறைக்கும் பணியில் ஈடுபட துவங்குகிறது.தங்களது வேலையை காப்பாற்ற பீட்டர் கிப்பன்சும் அவனது நண்பர்கள் மைக்கேல் போல்டன் மற்றும் சமீர் அடிக்கும் லூட்டிகளே இந்த படம்.

ஆரம்பம் முதல் முடிவு வரை இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக ஐ. டி கம்பனியில் வேலை செய்பவர்களுக்கு இது இன்னும் பிடிக்கும்.சனிக்கிழமை வேலை செய்ய சொல்லும் மேனேஜர்,அதில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஊழியன் என்று ஐ. டி ஊழியர்கள் அன்றாடம் சந்திக்கும் காட்சிகளே இடம் பெறுவது இதன் சிறப்பு.

லாஜிக் பார்க்காமல் சிரித்து மகிழ வேண்டிய படம் இது.

இதன் டிரைலர் இதோ



0 பின்னூட்டங்கள்: