ப்ளிப்கார்ட் - இந்தியாவின் அமேசான்

பதிவு: Blogger

நம்மில் நிறைய பேருக்கு ப்ளிப்கார்ட்(Flipkart) இணையதளம் தெரிந்திருக்கும்.சச்சின் மற்றும் பின்னி பன்சல் ஆகியோரால் அக்டோபர் 2007 இல் துவக்கப்பட்டது.இவர்கள் இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.இவர்கள் தங்கள் நிறுவனத்தை பிரபலபடுத்த விளம்பரங்களை உபயோகபடுத்தவில்லை.மாறாக தங்கள் வாடிக்கையாளர்களைப் பயன்படுத்தினர்.எல்லா புத்தக கடைகளை விட இவர்களிடம் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.


நீங்கள் இணையத்தளம் மூலமாக ஆர்டர் கொடுத்தால் மூன்று நாட்களில் வந்து சேரும்,தபால் செலவு கிடையாது போன்ற அம்சங்கள் இதனை பிரபலமாகியதென கூறலாம்.முன்பு புத்தகங்கள் மட்டுமே விற்று வந்த ப்ளிப்கார்ட் தற்போது டிவிடி,காமெரா,அலைபேசிகள் என்று பலவற்றை விற்கின்றது.சாம்சங் காலக்சி S5830 பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்குமாறு நேற்று அறிமுகப்படுத்தபட்டது.

இதுவரை நீங்கள் பிளிப்கார்ட்டில் ஒன்றுமே வாங்கவில்லை எனில் இங்கே செல்லவும்


0 பின்னூட்டங்கள்: