இன்டு தி வைல்ட் திரைப்படம் - ஒரு பார்வை

பதிவு: Blogger

இன்டு தி வைல்ட் திரைப்படம் ஷான் பென் நடித்து திரைக்கதை எழுதி இயக்கிய படம்.2007இல் வெளிவந்த இந்த படம் பலரை கவர்ந்துள்ளது. இனி இந்த படத்தினை அலசுவோம்.


கிரிஸ் மேக்கண்டலஸ்(Chris McCandless) என்பவருடைய வாழ்க்கை வரலாறே இந்த படம்.இந்த சமூகம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும் கிரிஸ் மேக்கண்டலஸ் பல்வேறு மைல்கள் கடந்து அலாஸ்கா காட்டினுள் செல்கிறார். காட்டிற்குள் செல்லும் மேக்கண்டலஸ் அங்கேயே இறந்து விடுகிறார்.அவர் எப்படி இறந்தார் என்று அலசும் ஒரு கட்டுரையை ஜான் கிரகையர்(Jon Krakauer) அவுட்சைடு(Outside) என்ற இதழில் எழுதுகிறார்.இதற்கு வரவேற்பு பலமாக இருக்க இன்டு தி வைல்ட்(Into the Wild) என்ற புத்தகத்தை எழுதுகிறார்.இந்த புத்தகத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

கால் ஆப் தி வைல்ட் என்று ஒரு டாகுமெண்டரியும் உண்டு.அவர் எப்படி இறந்தார் என்ற கேள்வியை விட ஏன் இந்த சமூகத்தை விட்டு வெளியே வர முடிவு செய்தார், அவர் சந்திக்கும் பலவித மனிதர்கள், பல்வேறுபட்ட அனுபவங்கள் ஆகியவை இந்த திரைப்படத்தில் மேலோங்கி நிற்கின்றன.

அழகிய வசனங்கள் நிறைந்து காணப்படும் இந்த திரைப்படத்தில் இருந்து சில இதோ

Christopher McCandless: I'm going to paraphrase Thoreau here... rather than love, than money, than faith, than fame, than fairness... give me truth.

You are wrong if you think that the joy of life comes principally from the joy of human relationships. God's place is all around us, it is in everything and in anything we can experience. People just need to change the way they look at things.
The core of mans' spirit comes from new experiences.

Christopher McCandless: Mr. Franz I think careers are a 20th century invention and I don't want one.


Two years he walks the earth. No phone, no pool, no pets, no cigarettes. Ultimate freedom. An extremist. An aesthetic voyager whose home is the road. Escaped from Atlanta. Thou shalt not return, 'cause "the West is the best." And now after two rambling years comes the final and greatest adventure. The climactic battle to kill the false being within and victoriously conclude the spiritual pilgrimage. Ten days and nights of freight trains and hitchhiking bring him to the Great White North. No longer to be poisoned by civilization he flees, and walks alone upon the land to become lost in the wild.


கண்டிப்பாக இந்த படம் பலரினுள் ஒரு விரக்தியினை கொண்டு வரலாம்,சிலர் என்னடா படம் இது என்று கூட புலம்பலாம். என்ன சொன்னாலும் வாழ்வில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது .

0 பின்னூட்டங்கள்: