என்னைக் கவர்ந்த பிறமொழி இயக்குனர்களைப்பற்றிய பதிவு
1.ஜூலியோ மெடம்(Julio Medem)
1.ஜூலியோ மெடம்(Julio Medem)

சிறந்த ஸ்பானிஷ் இயக்குனர்களில் இவரும் ஒருவர் .இவரின் எல்லா படங்களையும் நான் பார்த்திருந்தாலும் என்னை கவர்ந்தவை லூசியா ஒய் அல் செக்ஸோ(Lucía y el sexo),ல ஆர்டில ரோஜா(La Ardilla Roja),திஎயெர்ரா(Tierra). அருமையான ஒளிப்பதிவு இவரது படங்களின் சிறப்பம்சம்.ஸ்பெயினுக்கு நேரில் சென்றது போல் இருக்கும்.
2.கியுசெப்பே தர்ணட்டோர்(Giuseppe Tornatore )
2.கியுசெப்பே தர்ணட்டோர்(Giuseppe Tornatore )

இவருடைய சினிமா பாரடய்சோ(Cinema Paradiso) பலருக்கும் தெரிந்த ஓன்று.மலேனாவும்(Malena) இவரது பேசப்பட்ட படங்களில் ஓன்று.இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் மற்ற படங்களுக்கு சம்பந்தம் இல்லாமலும் இருக்கும்.
3.கிம் கி டுக்(Kim Ki Duk)

வன்முறைக்கு பெயர் போன இயக்குனர் இவர் என்றாலும் இவரது ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர் அண்ட் ஸ்ப்ரிங்(Spring Summer Fall Winter and Spring) என்ற ஜென் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
4.குவென்டின் டாரண்டினோ(Quentin Tarantino)

ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் இவரும் ஒருவர்.வேகமான வித்தியாசமான திரைக்கதை, நச்சென்ற வசனங்கள் இவரின் சிறப்பம்சம்.பல்ப் ஃபிக்ஷன்(Pulp Fiction),ரிசர்வாயர் டாக்ஸ்(Reservoir Dogs), இன்க்ளோரியஸ் பேஸ்டர்ட்ஸ்(Inglorious Bastards),கில் பில்(Kill Bill Trilogy),ஜாக்கி பிரவுன்(Jackie Brown) போன்றவை இவரின் சிறந்த படங்கள்.
5.கய் ரிட்சி (Guy Ritchie)

பிரிட்டனின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.டாரண்டினோ போலவே இவரின் படைப்புகளும் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். ஸ்னாட்ச்(Snatch),லாக் ஸ்டாக் ஆண்ட் டூ ஸ்மோகிங் பாரல்ஸ்(Lock,Stock and Two Smoking Barrels),ராக் அன் ரோலா(RocknRolla),ரிவால்வர்(Revolver) ஆஹியவை இவரது பிரபலமான படங்கள்.
6.கெவின் ஸ்மித்(Kevin Smith)

கிளர்க்ஸ்(Clerks) என்ற லோ பட்ஜெட் படம் மூலம் மிகவும் புகழ் அடைந்த இயக்குனர் இவர்.நகைச்சுவையான வசனங்கள் நிறைந்து காணப்படும் இவரது படங்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.ஆனால் இவரது படங்கள் எல்லோருக்கும் பிடிக்காது. உங்களுக்கு கிளர்க்ஸ் பிடித்திருந்தால் மற்ற படங்களும் பிடிக்கும்.
7.டேவிட் லின்ச் (David Lynch)

இவரது படங்களை புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை.இவரது படங்கள் அருமையான த்ரில்லர்கள்.மல்ஹோலன்டு டிரைவ்(Mulholland Drive),லாஸ்ட் ஹைவே(Lost Highway) சிறந்த உதாரணங்கள்.
8.கிறிஸ்டோபர் நோலன்(Christopher Nolan)

இவரும் டேவிட் லின்ச் போலத்தான்.இவரது சில படங்களை புரிந்து கொள்வதற்கு ஒரு ஆராய்ச்சியே வேண்டும்.மெமண்டோ(memento) மூலம் இவர் ஆரம்பித்த பயணம் டார்க் நைட்(Batman-Dark Knight) இன்செப்ஷன்(Inception) என்று தொடர்கிறது .
இயக்குனர் பட்டியல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Post a Comment