என்னைக் கவர்ந்த திரைப்படங்கள்

பதிவு: Blogger

எனக்கு பிடித்த திரைப்படங்களின் தொகுப்பு இது

1.தி மேட்ரிக்ஸ்(The Matrix)



தாமஸ் ஏ.ஆண்டர்சன் "நியோ" என்ற புனைபெயரில் ஒரு ஹேக்கராக ரகசிய வாழ்க்கை நடத்துகிறார், அத்துடன் "மேட்ரிக்ஸ் என்றால் என்ன?" என்பதற்கான கேள்விக்கு விடை காணவும் விரும்புகிறார். அவருடைய கணிப்பொறி திரையில் தோன்றும் மறையீட்டு செய்திகளும், மூன்று உளவாளிகளை அவர் எதிர்கொள்ள நேரிடுவதும் புதிரான ரகசிய அறையில் ஹேக்கராக இருக்கின்ற மார்பியஸால் வழிநடத்தப்படும் குழுவிற்கு அவரை அழைத்துச்செல்கிறது, மார்பியஸ் அவருக்கு மேட்ரிக்ஸைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறார்:

ஒரு சிவப்பு மாத்திரையை விழுங்கினால் உண்மையைத் தெரிந்துகொள்ளலாம், நீல மாத்திரையை விழுங்கினால் அவருக்கு தெரிந்த உலகத்திற்கே அவர் திரும்பச் செல்லலாம். நியோ சிவப்பு மாத்திரையை விழுங்கும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார், அத்துடன் அடுத்தடுத்து தன்னுடைய உடலானது திரவம் நிரப்பப்பட்ட உறை ஒன்றில் இருப்பதையும், இதேபோன்ற உறைகளைக் கொண்டு மூடப்பட்ட நீண்ட இயந்திர கோபுரத்தோடு கம்பிகளாலும் குழாய்களாலும் அவருடைய உடல் இணைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறார். இந்த இணைப்புக்கள் நீக்கப்படுகின்றன, அவர் மார்பியஸால் மீட்கப்பட்டு அவருடைய ஹாவர்கிராப்டான நெபுகண்ட்நெசருக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். நியோவின் கைவிடப்பட்ட பௌதீக உடல் மீண்டும் காப்பாற்றப்படுகிறது.

இப்படி விறுவிறுப்பாக செல்லும் இந்த படத்தில் நிறைய ஆன்மீக வசனம்களும் உண்டு .

2.இன்டு தி வைல்ட்(Into the Wild)



கிரிஸ் மேக்கண்டலஸ்(Chris McCandless) என்பவருடைய வாழ்க்கை வரலாறே இந்த படம்.இந்த சமூகம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறும் கிரிஸ் மேக்கண்டலஸ் பல்வேறு மைல்கள் கடந்து அலாஸ்கா காட்டினுள் செல்கிறார்.
ஷான் பென் நடித்துள்ள இந்த படம் எல்லோரும் பார்க்கவேண்டிய ஒன்று.

3.பல்ப் ஃபிக்ஷன்(Pulp Fiction)



கதாசிரியர்-இயக்குனர் க்வென்டின் டரான்டினோவின்(Quentin Tarantiono) வர்த்தகச் சின்னமான நேரிலா கதையம்சத்துக்கேற்ற(Non Sync Screenplay) வகையில் கதையானது பிறழ்வானதாக அளிக்கப்பட்டுள்ளது. பல்ப் ஃபிக்ஷன் டரான்டினோவின் மனதில் உதயமான மூன்று வெவ்வேறான ஆனால் ஒன்றோடொன்று தொடர்புடைய கதைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கூலிப்படைத் தலைவன் வின்சன்ட் வேகா முதல் கதையின் கதாநாயகனாகவும், குத்துச்சண்டை வீரர் புச்ச் கூலிட்ஜ் இரண்டாம் கதையின் நாயகனாகவும், வின்சன்டின் சக ஒப்பந்தக் கொலையாளி ஜூல்ஸ் வின் ஃபீல்ட் மூன்றாவது கதையின் நாயகனாகவும் உலா வருகின்றனர்.ஒவ்வொரு கதையம்சமும் வெவ்வேறு தொடர் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு வழிகளில் அவை இணைந்தும் குறுக்கிடும் வண்ணமும் அமைந்திருக்கின்றன. உணவு விடுதி ஒன்றில் பம்ப்கின் மற்றும் ஹனிபன்னி ஆகியோரால் அரங்கேற்றப்படும் கொள்ளை காட்சியோடு ஆரம்பமாகும் இத்திரைப்படம் பின்னர் வின்சன்ட், ஜூல்ஸ், புச்ச், கொள்ளைக்கூட்டத் தலைவன் மார்செல்லஸ் வால்லஸ், அவரது மனைவி மியா மற்றும் நிழல் உலக புதிர் விடுவிப்போன் வின்ஸ்டன் வுல்ஃப் ஆகியோரின் கதைகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இறுதியாக எந்த உணவு விடுதியில் தொடங்கியதோ அங்கேயே முடிவடைகிறது.


4.500 டேஸ் ஆப் சம்மர்(500 Days of Summer)



இது குறித்து நான் எழுதிய பதிவு இங்கே உள்ளது

5.சினிமா பாரடைஸோ(Cinema Paradiso)



டோடோ என்ற சிறு பையனுக்கும் அந்த இத்தாலிய சிறுநகரத்தில் திரையரங்கில் படம் ஓட்டுபவராக இருக்கும் ஆல்பிரடோவுக்கும் இடையேயான நட்பு பற்றிய படம். டோடோ வளர்ந்து விடலைப்பருவத்தில் எலினாவை காதலிக்கிறான். எலினாவின் மீதான காதலுக்கு சமமாக அவன் சினிமாவையும் காதலிக்கிறான். ஆல்பிரடோ இந்த இரண்டு காதலுக்கும் எதிராக இருக்கிறார் . நம்மை மீண்டும் இளமை காலத்திற்கு கொண்டு போகும் ஒரு அருமையான திரைப்படம்

இதன் டைரக்டர்ஸ் கட்(Director's Cut) பதிப்பை பாருங்கள்.

6.ஃபைட் கிளப் (Fight Club)


சக் பலாஹ்னிக்(Chuck Palahniuk)எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை டேவிட் ஃபின்சர் இயக்கி இருந்தார்.

7.தி டெர்மினல் (The Terminal)



க்ரோக்கோசியா என்ற நாட்டிலிருந்து, நியூ யார்க்கின் JF Kennedy விமான நிலையத்திற்கு வந்திறங்கும் , நவோஸ்கி என்ற மனிதனின் வாழ்க்கை இப்படத்தில் சொல்லப்படுகிறது. நாட்டிலிருந்து புறப்பட்ட பிறகு உள்நாட்டு கலவரம் வெடித்து, நாடு தனிமைப்படுத்தப்படுகிறது. இதன் காரனமாக அமெரிக்கா தன் நாட்டினுள், இதுபோன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் எவரையும் அனுமதிக்கத் தடை விதிக்கிறது.

இதை அறியாத நிலையில் தன்னுடைய மொழிப்பிரச்சனையின் காரணமாக அந்த விமான நிலைய கண்காளிப்பாளரைச் சந்தித்தும் நிலைமையை சரிவர உணராத சூழ்நிலைக் கைதியாக தனித்து விடப்படுகிறார். நிலைமை சரியாகும் வரை அவரை வெளியில் விட முடியாத சூழ்நிலையிலும் , ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும், கண்காளிப்பார் உத்தரவின் பேரில் 64ம் நம்பர் கேட்டில் தங்கிக் கொள்ள அனுமதி பெறுகிறார்.

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை


6 பின்னூட்டங்கள்:

  1. "ராஜா" said...

    நான் நீங்கள் எழுதி இருக்கும் படங்கள் எதுவும் பார்த்ததில்லை ..... ஆனால் கேள்விப்பட்டு இருக்கிறேன் .... பார்க்க வேண்டும் ....

  2. The Rebel said...

    இவை கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள் ராஜா
    வருகைக்கு நன்றி!!

  3. ம.தி.சுதா said...

    நிங்க சொன்னதில் முதல் படம் மட்டும் தான் பார்ருத்திருக்கிறேன்... பதஜவு அருமை....
    முடிந்தால் நம்ம ஓடையிற்கும் வாங்க... mathisutha.blogspot.com

  4. The Rebel said...

    முடிந்தால் அனைத்தையும் பாருங்கள்.

  5. Moni said...

    நீங்கள் சொன்ன அத்தனைப் படங்களையும் நான் பார்த்துள்ளேன்.. சொன்னது போல எல்லாம் அருமையானவை.. அதிலும் "பல்ப விக்சன்", "டேர்மினல்", "இன் டூ த வைல்ட்" முக்கியமானவை.. இன்னும் நிறைய படங்கள் உள்ளது.. அதையும் உங்கள் பதிவில் சேர்த்தால் ஒரு மிகச் சிறந்த பதிவாக அமையும்..

  6. The Rebel said...

    என்னை கவர்ந்த திரைப்படங்களின் மொத்த பட்டியல் இதோ

    http://www.imdb.com/list/e0WIGPEOCIw/