அறிமுகம் ஒபரா 10.5

பதிவு: Blogger

விண்டோஸ் இயங்குதளத்தின் மிக வேகமான உலாவி ஒபரா 10.5 வெளிவந்துள்ளது.நெருப்பு நரியும்(Firefox) கூகுள் க்ரோமும் நாங்கள் தான் மிக வேகமான உலாவிகள் என்று கூறி வரும் நேரத்தில் இப்போது ஒபராவும் இந்த களத்தில் குதித்துள்ளது.


இனி அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்:

புதிய ஜாவா ஸ்கிரிப்ட் என்ஜின் ஏழு மடங்கு அதிகம் வேகத்தினை தருகிறது.
ஒபராவிலும் ரகசிய உலாவி(Private Browsing) வந்தாச்சு.
பல புதிய விட்ஜெட்டுகள் அறிமுகம்.
ஒபரா டர்போ வேகத்தினை அதிகரிக்கின்றது


இவர்கள் இவ்வளவு எல்லாம் சொல்கிறார்களே என்று நான் சோதித்து பார்த்ததில் பழைய ஒபராவினைக்காட்டிலும் புதியது வேகமாகவே இருக்கின்றது, ஆனால் நெருப்பு நரியின் வேகத்திற்கு இதனால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இதுவரை ஒபராவினை உபயோகித்து பார்க்காதவர்கள் கண்டிப்பாக இந்த பதிப்பினை உபயோகிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய


2 பின்னூட்டங்கள்:

  1. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    ஒரு புதிய தகவல் தந்தமைக்கு நன்றி !

  2. The Rebel said...

    வருகைக்கு நன்றி சங்கர்.