அறிமுகம் குப்பத்தொட்டி டாட் காம்

பதிவு: Blogger

உங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை உடனே அள்ளிக்கொண்டு செல்ல ஒரு தளம் வந்துள்ளது.குப்பத்தொட்டி டாட் காம் (http://kuppathotti.com) இந்த தளம் சிங்கார சென்னையில் செயல்படுகின்றது.



நம்ம மக்கள் குப்பைகளை கொட்டக்   கூட இணையதளத்தை நாட வேண்டிய நிலை வந்து விட்டதா என்ன ?

என்னதான் இருந்தாலும் இது ஒரு புதிய முயற்சி தான்.பாராட்டுவோம்!!

ட்விட்டருக்கு அடிமையா நீங்கள்?

பதிவு: Blogger

இன்று நம்மில் பலபேர் ட்விட்டர் பயன்படுத்துகின்றோம்.இதனால் என்னுடைய பதிவுகளின் எண்ணிகையும் குறைய துவங்கியுள்ளது.நம் மனதில் வரும் எண்ணங்களை  அங்கேயே பதிவு செய்வதால் பதிவு போடுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

நீங்கள்  ட்விட்டருக்கு அடிமையா என்று தெரிந்து கொள்ள இதை பாருங்கள்





கீஸ்லோவ்ஸ்கியின் சினிமா

பதிவு: Blogger

போலந்து நாட்டில் பிறந்த இயக்குனர் கீஸ்லோவ்ஸ்கி(Krzysztof Kieślowski) தனது  அற்புதமான ஒளிப்பதிவுக்கு  பெயர் பெற்றவர்.இவரது படங்கள் ரஷ்ய இயக்குனர் தார்கொவ்ஸ்கி(Tarkovsky), மற்றும் அமெரிக்க இயக்குனர் குப்ரிக்(Kubrick) படங்களுக்கு நிகரானவை.

த்ரீ கலர்ஸ்: ரெட், ப்ளூ, வைட்(Three Colors:Red,Blue,White) என்ற மூன்று படங்களே இவரது கடைசி படங்களாக  அமைந்தன.

த்ரீ கலர்ஸ்:ப்ளூ படத்தில் இருந்து ஒரு அழகிய காட்சி இதோ 



தி டபள் லைப் ஆப் வெரோனிக்   படத்தில் இருந்து இன்னொரு  அழகிய காட்சி இதோ 


இவரை போன்ற ஒரு இயக்குனர் உலக  சினிமாவுக்கு இனி கிடைப்பது அரிது தான்